Wednesday, May 30, 2012

நட்பு அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்...


காதல் தான் உன்னதமானது
என்று எண்ணிவிடாதே
அதைவிட மேலானது நட்பு
காதல் ஒருநாள்
உன்னை கைவிடகூடும்
ஆனால் உண்மையான நட்பு
உன்னை துயரதில் கூட கைவிடாது
காதல் உன்னை எதிர்பார்க்கிறது
உன்னை தனக்கே சொந்தமென
எண்ணவைக்கிறது
நட்பு உன் அன்பை மட்டும்தான்
எதிர்பார்க்கிறது.
உன் கண்ணீரை துடைக்க
உன் கைகள் உயரும் முன்னரே
நட்பின் கை உன் கண்ணீரைத்
துடைத்துவிடும்
உன்மையான நண்பர்கள்
யார் என்று தெரிந்து நட்பாய் இருந்தால்
உன் இறுதிக் காலம் வரை கூடவே வரும்
அதுதான் தூய்மையான நட்பு........

நிழலும் நிஐமாகும்


நிஐத்தை நம்பி
நிழலை வெறுக்கிறாயன்பே
நீ நம்பிய நிஐம் இன்று மட்டும்தான்
நாளை சற்றுத்திரும்பிப்பார்
நீ வெறுத்த நிழல்
அன்றுதான் நிஐம் எண்று உணர்வாய்
என்றும் உனக்காக
நீ பொய்யென நினைத்த அந்த நிழல்
உன்பார்வையில் பொய்யாக
நிஐமாக உன்கூடவே வரும்
இருவரும் சாகும் வரை......

கண்ணீர்


அன்பே!
உன் கண்களில் பிறந்து
உன் கன்னத்தில் தவழ்ந்து
உன் உதடுகளில் மரிக்கும்
உன் கண்ணீராய் நான்
ஆனால்...
நான் உவர்க்க மாட்டேன்
மாறாக இனிப்பேன்.
காரணம் வாழ்வது
சில நொடியாக இருந்தாலும்
அது உனக்காக இருக்க வேண்டும்
அதுவும் உன்னோடு இருக்க வேண்டும்.

கலைந்து போன காதல்



உன் பார்வையினில்
புரிந்து கொண்டேனடி
நீ என்னை காதலிக்கின்றாய் என்று
ஆனாலும்
ஏற்க மனம் தயங்குகிறதடி
என் குடும்பத்தின்
கனவுகள் கலைந்து விடுமோ
நான் காதல் கொண்டால் என்று?
என் குடும்பத்தின் கனவுகள் முன்
என் காதல் கனவுகள் ஒன்றும்
பெரிதாகத் தோன்றவில்லை
கலைத்துவிட்டேனடி
என் காதல் கனவுகளை
குடும்பத்தின் கனவுகளிற்காய்...

செய்த பாவன் தீர்த்திடத்தான்...!


மண்ணை  உருட்டி உலகைச்செய்த...
எங்களது இறைவா...!
தமிழ் இனத்தை -  இங்கிருந்து
உருட்டி விடல்...
அது உனக்குச் சரியா..?
விடிவிற்காக போரிட்டதே...
எங்களது இனம்,
விடியும் போது இருட்டவிட்டாய்...
எந்தளவு நியாயம்...?

மறுபிறப்பு தத்துவத்தை...
சொல்லிவைத்த நீயே...!
மறுபடியும் - எம்மை 
பிறக்க வைக்க வேண்டாமையா..! இறைவா...
இழவு வீடா...  மாற்றிவிட்டாய்...
எங்களது நாட்டை...
ஏன் கொடுத்தாய்...!
எங்களுக்கு இப்படியோர் கேட்டை...?

ஈழ மண்ணை அழிப்பதிலே...
உனக்கு என்ன பெருமை...!
ஏலுமென்றால் சொல்லிவிடு...
எங்களிடம்...பதிலை...!

அழுதழுது வற்றிப்போச்சி...
கண்ணிலுள்ள... நீரு
அழும்போது...
துடைப்பதற்காய்...வந்ததெல்லாம்...?
கறைபடிந்த கையி...!
அழுவதற்கு நீருமில்லை...
எங்களது
கண்ணில்...!அழு(கிறோம்)ம்போது,,,
வரவில்லையே - கல்
நெஞ்சக்கடவுள்
ஒருதடவை - வந்து
இங்கு
நீயும் கொஞ்சம் பாரு...
கடவுளே,,,!
உன்னைக்கொல்லும் - உந்தனது
மனதிலுள்ள நீதி.
உலக நீதி காத்திடத்தான் -  நீயும்
இங்கு வாவேன்..!
செய்த பாவன் தீர்த்திடத்தான்...
தமிழனுக்கு...
நாடு ஒன்றைத்தாவேன்.

Friday, May 25, 2012

மனதை உருக்கும் கடல் கன்னி [விடியோ இணைப்பு]

என் உயிர் உனக்கே சமர்ப்பணம்


என் கவிதைகள்
என்றும் உனக்காக
நீயோ என்றும்
எனக்கே எனக்காக
இதில் இல்லை மாற்றம்
இது புரியாமல் ஏன்
என் மீது கோபம்
உன் நினைவுகளின் நிழல்களில்
என் இருப்பிடம்
உன்னை இழந்த பின்
நானோர் நடைப்பிணம்
இரவுகள் எல்லாம்
என் குருஷோத்திரம்
இதை நீ அறிவதால் பிறக்குமா
என்மேல் கரிசனம்
உனை எண்ணியே உருகுதே
என் உயிர் தினம் தினம்
உறுதியாய் சொல்கிறேன்
இனி என் உயிர்
உனக்கே சமர்ப்பணம்.

என் சுவாசமே ....


எங்கோ இருந்து....
நீ எழுதும்....
வரிகளை நேசிக்கிறேன்.....
உனக்காய்.....
ஒரு உருவம் வரைந்து ....
தினமும் ....
அழகு பார்க்கிறேன்.....
உன்முகம் தெரியாமலே ...
வார்த்தை விளையாட்டில்...
ஏன் வாழ்க்கை.... 
உன் மௌனங்களுக்குள் ....
சிக்கிக்கொண்டதே ....
மீட்டுக்கொடுத்துவிடு ....
உன் மௌனச் சிறைக்குள் ...
எனை ...
ஆயுட்கைதி ஆக்கிவிடாதே....
வலுவிழந்து போன ...
கைகளை பற்றிப்பிடித்து....
எழுத வைத்த நீயே ...
என் கைகளை ...
ஒடித்து விடாதே ....
உன் வரிகளே ...
என் சுவாசம்...
என்று தெரிந்தும் ....
ஏன் எழுத மறுக்கிறது....
உன் பேனா ...
உன் வார்த்தைகள் ....
எனை புண்படுத்திவிடும்...
என்பதற்க்காய் ....
மௌனத்தை நேசிக்கும் நீ ....
இன்னும் புரிந்து கொள்ளவில்லை ......
உன் மௌனங்களால் .....
நான் தினமும் இறந்து கொண்டிருப்பதை.....

உன் மௌனங்களை விட .....
கொடுமையான பதில் ....
உன்னிடம் இருக்காது .....
அதை உனக்காக எழுதாவிடினும் .....
உன் வரிகளை சுவாசிக்கும் ....
ஓர் இதயம்...
உயிர் வாழ்வதற்காய் எழுது.....

நானென்பதும் அவளென்பதும்


என்றும் நீங்காது என் நினைவில்
நிறைந்திருக்கும் அவளே
என் உடலுக்குள்
உலாவிடும் உயிராவாள்.
துயரத்தில் என் கண்கள்
வடிக்கின்ற துளி கண்ணீரை
துடைக்கின்ற இருகரமும்
அவளே தான்.
முழு இன்பத்தில்
நான் சிரிக்கின்ற போதினில்
என் புன்னகைக்குள்
ஒளிர்கின்ற விரிகின்ற பூரிப்பும்
அவளே தான்.
என் இதயத்து
தசைகள் விரிந்தும் சுருங்கியும்
தருகின்ற ராகத்தின் சுருதிலயம்
அவளே தான்.
வீணையின் தந்தி தருகின்ற
நாதத்தில் அதிகாலை பொழுதொன்றில்
மழைதாங்கி மலர்திருக்கும்
அழகான ரோஜாவில்
மலைமூடி நிற்கும் புகையான முகிலில்
முகில்கூடி பொழியும் மாலைமழையில்
நான் பார்க்கும் அனைத்தும்
அவளாக இருக்கும் போதினில்
அவளென்றும் நானென்றும் பிரிவென்பதேது.
அவளுக்குள் கரைந்து
நானும் எனக்குள்ளே உருகி அவளும்
நானென்பதும் அவளென்பதும்
உருவங்கள் மட்டுமே.
உயிராகி ஒன்றுக்குள் ஒன்றானோம்

இனிமை தந்த இரவு இன்று...


இனிமை தந்த இரவு
இன்று வேதனயாக
கனவு தந்த தூக்கம்
இன்று தூக்கம் கலைக்கின்றது
உன் காட்சியே கோலமாய்
இருந்த கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்...
தென்றலாய் இருந்த என்
மனம் அன்று உன்னை
மணக்கோலம் கண்ட
நாள் முதலாய் புயலாய்...
உன் திசையை நோக்கி
பயணித்த என் கால்கள்
இன்று மரணத்தை நோக்கி.....

வருவாயா தேடி....


சில்லென்று சிதறும்
மழைத் துளிபோல - உன்
வரவு இனித்த கணங்கள்
நினைவில் எழுந்து - கண்களை
பனிக்க வைக்கிறது.
களங்கமில்லா காதலில்
கனிவான உன் முக
தரிசனம் கூட சுகமானது...
எஞ்சிய வாழ்வில்
மிஞ்சிய உன் நினைவுகள்
வஞ்சி எனை வதைப்பதால்
மீதி நாளெல்லாம்
வேதனை மட்டும் மீதமாய்...
நெடுதுயர்ந்த கம்பீரத்தில்
நெடுநாளாய் நீ என்னுள்
நெருங்கி வர முயாமல்
நொறுங்கி உள்ளம் நிற்கிறது..
நீண்ட நாட்கள் உனைக் கண்டு - மனம்
துண்டாகி அழுகிறேன் இன்று..
உறவுக்காய் உனை இழந்தேன் - என்
மறைவுக்காவது வருவாயா தேடி..!!!!!
உனைக் கண்டு
உயிர் விடவே எனதாசை..
உயிர் தரித்து வருவாயா எனக்காய்...!!!!!

!!! புரிய மறுப்பது ஏன் ? !!!


உடல் இருக்கிறதே
உயிர் எங்கோ
உறவாட ஏங்குதே
உள்ளம்
உண்மைகள் சொன்னதால்
உதறுகிறார்கள் உன்
உறவுகள் நம் காதலை
உடலை மட்டும் நேசித்து இருந்தால்
ஊனமாகி போனாலும்
ஊமையாய் இருந்திருப்பேன்
உரிமையாய்
உன் மீது கொண்ட காதலை
உயிர் என நேசித்து
உறவுகள் சம்மதம் வேண்டி
உள்ளம் அழுகிறதை
உலகே புரிகிறது
உன் உறவுகள்
புரிய மறுப்பதேன் ஏன் ?

இறைவன்


இறைவன் ஜீவனுக்காய் ரட்சித்த உலகை
ஜீவநதிகள் இரட்சித்தது இறைவனை
இறைவன் மனிதனை தெரிந்து கொண்டான்
மனிதன் இறைவனை தேடி
மதங்களை வளர்த்துக்கொண்டான்
எல்லா உயிருக்கும் வயிற்றில் பசி
எல்லா உயிருக்கும் முகத்தில் கண்
எல்லா உயிருக்கும் ஜீவன் ஒன்றே
அந்த ஜீவன் அனைத்திற்கும்
தலைவன் ஒன்றே
அவன்தான் இறைவன்
மதங்கள் என்று முத்திரைகுத்தி
இனங்கள் பிரிந்தது - அதனால்
இறைவன் தொலைந்துபோனான்
மதம் என்பது சாக்கடை
நீ வீழாவரைக்கும் ஞானி
இறைவனை மட்டும் அறிந்துகொள்
உன் நன்மை தீமை அவன் அறிவான்.

தொடராத வீணை


சின்னப்பாலமுனை பாயிஸ்
பூவையின் உச்சி முகர்ந்து
கூந்தல்களைக்  கோரிய
என் விரல்கள்
கோவை இதழ்களையும்
மெதுவாய் கிள்ளிக்கொள்ள
கருகிய காம்பாய்
சுருங்கி உதிர்ந்து
தரையில் படர்ந்தது
வீணையின் வடிவமாய்
தரையை அலங்கரிக்க
என் விரல்கள் துடித்தன
அதனை வாசித்துக்கொள்ள
வீணை மூடிய சீலை
காற்றில் அசைந்தாட
இதயத்தில் மேளதாளம்
ராகம் தொடரும்
இடம் தெரியாமல்
இடைநடுவே
விரல்கள் நடனமாட
சங்கதி நீண்டு கொண்டன
சுதி நழுவாமல்
சுவை ஏறிச்செல்ல
ரகரகமாய் ராகங்கள்
பெருகி வந்தது
பல்லவி சருகாமல்
கீதம் தொடர்ந்து கொள்ள
வீணை முறிந்து கொண்டது
முழுமைபெறாத கானமுமாய்
தொடராத வீணையுமாய்
ராகம் தேடும் ரசிகன்............

நினைவற்றவன்


நினைவுகள் இருந்தும்
நினைவுகளை
தொலைத்தவனாய்
சிதைத்தவனாய்
அந்த நினைவுகள்
என்னுணர்வுகளை
என் உடலிலிருந்து
வேறாக பிரித்தெடுத்து
ஐடமாக்கி நினைவற்றவனாக
என் கண்ணுக்கு தோன்றும்
இந்த பரந்த வெளித்திடலில்
முடிவை தேடுகிறேன்.
தொடர் நிகழ்வுகள் என்னை
தொடராக கலங்கவைத்து
மரத்து போன இந்த வாழ்வை
அழிப்பதற்க்கு நினைவுகள் இருந்தும்
நினைவற்றவனாக திரிகிறேன்
இந்த நினைவற்றவன்.

சில்மிச இரவுகள்


முடிச்சவிழ்ந்த கைலியின் இளகலில்
அவள் உள் நுழையும் கனவினில்
பின் இரவு கரையக் கண்டேன்
உக்கிர கோடையில் வழியும் அவள் வியர்வையில்
கமழும் நறுமண மலர்களின் வாசம்
நாசியின் அடிவரை நுழைந்து
இதயத்தின் இடம் வலம் தொடும்
சொப்பன சுந்தரியின் வனப்புகளில்
தாவித் திரியும் அவாவின் அலைவுகளில்
தொலைத்த வினாடிகளின் தொகுப்பே
எனது வாழ் காலத்தின் கணக்காகிறது
முன் மாலைப் பொழுதின் இரம்மிய அழகை
விழுங்கத் துடிக்கும் சர்ப்பத்தின் நாக்கில்
மேனகையின் மோகமுகம்
என்னைக் காமத்தின் சொர்க்கத்துள் தள்ளி விடுகிறது
சிலிர்த்தடர்ந்த பூஞ்சோலையாய்
அவள் உதிர்த்து விட்டுப்போன புன்னகையில்
மயிலிறகின் வருடல்
உடல் முழுதும் சில்மிச நடனம் புரிகிறது
இரவு கடந்து வெகு நேரமாகியும்
கலையாத அவள் முகம்
என் நினைவுக் குழியினுள்
கனவுகளைத் தேக்கியபடியே
புயல் கடந்துபோன தேகத்தின் அயர்ச்சியில்
மூர்ச்சையாகிக் கிடக்கிறது எனதுடல்.

Tuesday, May 22, 2012

யுத்த வெற்றி என்ற மாயை......!!!!


சத்தமின்றிக் கடந்த
யுத்த நிறைவின் மூன்றாண்டில்
இன்னும் மருந்தின்றிய
தழும்புகளோடு அழுகிறது நாடு
வென்றோம் எங்கள் நாடென்று
குதூகலிக்கும் சாராரும்
இறந்தவர்களுகாய் இரங்கல் செய்வோரும்
இருப்பவர்களின் பிணிதீர்க்க
இம்மியளவும் நினைத்திடவில்லை
மூன்றாண்டு கடந்தும்
முடிவுக்கு வராத சிறைபிடிப்புகளும்
நிறுத்திடாத இனத்துவேசங்களும்
நிர்க்கதியற்ற வாழ்வுகளும்
உண்மையான வெற்றியாகிடுமா??
அழிந்தவர்களின் நாமங்களோடு
அழித்தவர்களைப் பழிதீர்க்க
இருப்பவர்களின் வதை போக்காது
வாய்ப்பேச்சுகளில் யுத்தம் செய்து
ஊனங்களுக்கு உபத்திரம் சேர்ப்பதில்
காணத்துடிப்பதுதான் எதுவோ....!!!
இரு சாராருக்கும் நடுவில்
அப்பாவி உயிர்களங்கு
அல்லல் படுகிறது உணவுக்காய்
ஈழமண்ணோ இலங்கை மண்ணோ
வயிற்றுப் பசிக்காய் அழும்
உயிர்களின் கதறல்கள்
யாருக்குமே கேட்கவில்லையே....!!!
சுற்றுலா எனும் பெயரிலும்
வெற்றி விழா எனும் பெயரிலும்
இரங்கல் விழா எனும் பெயரிலும்
வீணடிக்கும் கிரயங்களை சேர்த்து
ஈழமண்ணின் உயிர்களுக்கு
இரைகளுக்காகக் கொடுத்திடுங்கள்
பிரதேசவாதங்களோ
மதத்துவேசங்களோ அற்று
தன் (மனித)இனத்திற்குச் செய்யும்
உபகாரமாய் நினைத்து
ஓர் உயிருக்கேனும் அபயமளியுங்கள்
அங்கு காண்பீர்கள் பல வெற்றிகளை
தொடரும் துயர்களில்தான்
தளிர்விடுகிறது வெறுப்புகள்
வெறுப்பின் உச்சத்தில்தான்
அழிவின் ஆரம்பம் உதயமாகிறது
ஆளப்பிறந்தவனையும் ஆட்டிவைக்கும்
துயர்களுக்குத் தீர்வு வேண்டாமா........???

காற்றோடு வாழ்கிறேன்


சிரிக்கிறேன் தனிமையிலே
நிஜம்தானோ இதுவென்று
நித்திரையில் வீழ்ந்தபின்னே
வான்வெளியில் நடக்கிறேனே
கற்பனையில் காண்பதெல்லாம்
ஆன்மாவை தேடுதே
குளிரிலும் என்னுடல்
உறையவில்லை பெண்ணே!
மனத்திரையில் மாட்டிவைத்தேன்
விழித்திரையில் கோர்த்து வைத்தேன்
உன் ஆசைகளை சேர்த்து வைத்தேன்
இறுதியிலே உன்னிடத்திலென்
காதலைத்தான் தொலைத்து வந்தேன்
மீண்டும் உயிர் பிழைத்து வந்தேன்
உன்வசம் உள்ளதை இல்லையென்றாய்
என் காதலை வாங்கிய பின்னே...
இல்லையில்லை பொய்யென்றாய்
போடா பொறுக்கியென்றாய்
இத்தனைக்கும் வாடி நின்றேன்
கடைசியில் தானே போடி யென்றேன்
என்னுணர்வுகள் தின்ற பெண்ணே
நெஞ்சம் பதைக்கவில்லையா?
ஓரக்கண்ணால் பார்த்தாய் அறியாமல்
முழுப் படமாய் போனேனே
இன்று நிழற்படமாய் ஆனேனே
காற்றோடு வாழ்கிறேன்
உனை தொட்டுச் செல்கிறேன்
என் வாசம் புரிகிறதா உன்வசம்
உருவமில்லா உவமையானேன்
காதலர்களே காதலிக்கு(ம்) முன்னேயும்
கவனமாயிருங்கள் காதலுக்கு பின்னேயும்..

தூக்கம் திருடி விட்டாய்..


தூக்கத்தை திருடிக்கொண்டு
இனிய கனவுக்கு வாழ்த்திவிட்டு
விடை பெறுகிறாய்..
தூக்கத்தை தொலைத்த பிறகு
எங்கிருந்து வரும் கனவு..??
இமைகள் மட்டும்
இல்லாதிருந்தால்
உன் விழிவீச்சின்
தொடர் தாக்குதலில்
எத்தனை பேர்
இறந்திருப்பார்களோ..!!
ஊடல் காலங்களில்
கருக்கொண்ட முத்தங்களே
கூடலில் அதி வேகமாய்
பிரசவிக்கப்படுகிறது...
ஒவ்வொருவர் பிறந்த நாளிலும்
ஒரு நட்சத்திரம் தோன்றுமாம்..
நீ பிரிந்த அன்று
ஒரு நட்சத்திரம்
உதிர்ந்து விழுந்த வினாடியில் தான்
அதை நம்பத்தொடங்கினேன் நான்..!!!
உயிர் பிரியும் வேதனையை
என்னால் எளிதாய்
எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை
நீ என்னை விட்டு
பிரியும் போதெல்லாம்
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!

குட்டிக் கவிதைகள்


கோபம்
அழகான அவளுக்கு
வரவில்லையே காதல்
என்மீது
பொறுமை
என்னைத் தீண்டிய காதல்
உன்னையும் தீண்டும் ஒருநாள்
ஏக்கம்
விட்டில் பூச்சிகளுக்காக
விளக்கணைத்தாய்
எனக்குள் பற்றிக்கொண்ட
தீயை என்றணைப்பாய்
நீண்ட இரவு
விடிந்ததும் உன் முகம் பார்க்கலாம்
விழித்து விழித்துப் பார்கிறேன்
விடியவில்லையே இன்னும்..

பட்டறிவும் பாடமில்லை!


முட்டும் வரை தீயில்
விட்டில் அறிவதில்லையது
சுட்டு விடுமென்று!
கெட்ட வழி செல்லுவோரும்
விட்டில் போன்றே - அவர்
பட்டால் வலி...
மூட முட்டாளாயின்....
கெட்டொழிந்து போகும் வரை
தொட்டதையே தொடருவார்!

உயிரும் நீயடி ,,,!


உயிரிலே கலந்து
உள்ளத்தில் வாழ்பவளே
உயிரும் உனக்கென்று
உயில் எழுதி வைத்தவன் நானடி - பின்
உற்றவர் பேச்சினிலே
உளறுவது தினமும் நீயும் ஏனடி
உண்மையை உணராவிடின்
உலகமும் ஊமையடி
உள்ளத்தில் உதிர்த்த காதலை
உற்றவர்களுக்காக உதற
உணர்வற்றவள் நீயில்லையடி
உலகமே வெறுத்தாலும்
உறவுகள் எதிர்த்தாலும்
உறுதியாய் உரைக்கின்றேன்
உயிரின் பந்தமும் நீயே - என்
உள்ளத்தின் சொந்தமும் நீயே
உற்றவளாய் எனை ஆழும் உயிரும் நீயடி ,,,!

என்னில் வாழ்கிறாய்


என்
போர்க்கால வரலாற்றில்
ஆழ உஊடுருவும்
படையணியின்
தலைவன் நீதான்
உன்னை
தோற்கடிக்க முடியாமல்
தோற்கிறேன் பல முறை.
நீ
அழகாய் கீறி
அழிக்கப்பட்ட சித்திரம்.
புதிதாய்
வரைந்த பதிவுகள் மேலே
புதிராய் சிரிக்கிறாய்
வரைத்தடங்களாய் .
நிஜமாக
உன்னை
நெஞ்சத்தைவிட்டு
அகற்றினாலும்
நிழலாக
என்னிடம் நீ
நேற்று
உன் குரல் கேட்ட
நிமிடத்திலிருந்து
நமது குழந்தைகள்
நால்வருக்கும் - இன்று
பெயர் சூட்டு விழா
நடத்திவிட்டேன்.

முள்ளிவாய்க்கால் நினைவுகள்


சொல்லாமல் முடியாது
சொல்லி அழுதாலும் தீராது
எங்கள் மண் இழந்த சோகம்
எங்கள் மண் எங்கும் இப்போது
அன்னிய காலடிக்குள் அவதியுற்று
நித்தம் நித்தம் அனல் நடுவே
பூ போல கருகி கிடக்கிறது.
முள்ளிவாய்க்கால் என்பது
ஒரு காலப் பெரு வலி
எம் வாழ்வு நீளம் வரைக்கும்
எம் நெஞ்சை குத்தி குதறும்
ஊழிப் பெருவலி அது..........
நெஞ்சு நிறைந்து கனக்கிறது
இறுதி கணங்களில் உறவுகள்
எழுப்பிய மரண ஓலங்கள்
காப்பாற்ற யாருமே இல்லையா? என்ற
கதறலே இன்னும் காதுகளுக்குள்
மீள மீள வந்து இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவில் இன்று
என்ன சொல்ல போகின்றோம்
கை கூப்பி வணங்குவோம்
சிறு அகல் விளக்கெடுத்து
ஏற்றி வணங்கிடுவோம்.......
பிறகு வரிசையில் நின்று
மலர் எடுத்து தூவிடுவோம்
இவ்வளவும் தானா?
இது போதாது
எரிக்கின்ற நினைவேந்தி
எழுந்திட வேண்டும்.
வன்னிப் பரப்பெங்கும் எங்கள்
மூத்த தலைமுறை ஒன்றின்
பண்டாரப்பெரு வன்னியன் காலடி
படிந்து கிடக்கும் நிலம்
யாருடைய ஆளுகைக்கும் கீழே
அடங்காது என சொல்லி எழுவோம்......
வற்றாத வாய்க்கால்களும்
வாவிகளும் குளங்களும்
எப்போதும் பூத்துக் குலுங்கி
பழம் நிறைந்து நிற்கும் மரங்களும்
முற்றிய பயிர்கள் நிலம்தொட்டு
அறுவடைக்கு தயாராக நிற்குமே
அந்த வன்னி இப்போது
எல்லாவற்றிற்கும் யாரிடமோ
எப்போதும் கையேந்தி நிற்கும்
பொழுது முள்ளிவாய்க்காலுக்கு பிறகு
எங்கள் வயல்கள் எல்லாம்
எங்கள் நிலமெங்கும் மீண்டும்
அந்த அர்த்த ராத்திரியிலும்
தடுக்க யாருமோ
அதட்டி நிறுத்த எவருமோ இன்றி
நாம் உலாவும் நாள் எப்போது வரும்........

உன் மூச்சோடு நானும்


பூத்திருந்து
கண்கள் புண்ணாக
நோகின்றது
மூச்சிவிடும்
தென்றல் முள்ளாக
தைக்கின்றது
துணையில்லா
நெஞ்சம் தவியாய்
தவிக்கின்றது.......
நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு
நானும் மூச்சற்று
வாழ்கின்றேன்...

என் உயிர் பிரியும் போது...

உதயா

என்னில் நீயென்று
உன்னில் நான் என்று
கண்ணிலே கவிகொண்டு
கலந்திருந்தேன்
காதலில் உயிர் கொண்டு
அன்பென்றால் நீயென்று
அரவணைத்தேன் என் உயிர் கொண்டு
உன் உள்ளம் எனக்கென்று
எழுதினேன் உயில்
என் உயிரும் உனக்கென்று
என்னை நீ வெறுத்தாலும்
என்னை நீ பிரிந்தாலும்
என்னை நீ மறந்தாலும்
என்னை நீ அளித்தாலும்
என்னை நீ சிதைத்தாலும்
என் உள்ளம் உன்னையே நேசிக்கும்
என் இதயம் உனக்காய் துடிக்கும்
என் சுவாசம் உனக்காய் சுவாசிக்கும்
என் உயிரும் உனக்காக உடலில் இருக்கும்
என் உயிர் பிரியும் போது
என் உடல் உனக்குரியதாகதான் இருக்கும்.

அழகி நீ !


பப்பாளி முகத்தழகி - நீ
பளபளக்கும் தோலழகி
பால்வடியும் கன்னத்தழகி - நீ
பரவசமூட்டும் பேச்சழகி
கோவை பழ இதழழகி - நீ
கொஞ்சிபேசும் குரலழகி
புரியாத சொல்லழகி - நீ
புலம்பும் என் புகழழகி
கவியின்றி வீழ்த்திடும் விழியழகி - நீ
விடியாத என் வாழ்வின் கவியழகி
மதி மயக்கும் மார்பழகி - நீ
மங்கையருள் சிறந்த பேரழகி
கார் கூந்தல் கலையழகி - நீ
கற்பனையாய் என்னுள் கரைந்தழகி
ஓவியமாய் என்னுள் ஒளிந்தழகி - நீ
ஒவ்வொரு நாளும் எனை இயக்கும் காதலழகி ,,,!

கரும்புலி வீரர்களே!!!!


முகம் அறியாத உறவு அறியாத
எம் உறவுகளே!!!
மண் மீட்புக்காய் உயிர் கொடுத்தீர்
தமிழர் மனங்களெல்லாம் நிறைந்து நின்றீர்
மறைந்து விடவில்லை நீங்கள்
புதுவரலாறாய் பதிந்துவிட்டீர்
பிஞ்சுகள் மனதினிலே
கல்வெட்டாய் இருந்திடுவீர்
தெரிகிறதா எம்மையெல்லாம்
எம் தேசத்து உறவுகளே
என்று தென்றல் வடிவாக வந்து
கேள்வி கேட்டு நின்றீர்
நாங்கள் மண்ணையும் மறக்கமாட்டோம்
மண்ணுக்காய் மடிந்த
கரும்புலிகளையும் மறக்கமாட்டோம்
மாவீரர்கள் ஆறடி மண்ணை
சொந்தமாக்கினார்கள்
மண்ணுக்குள் துயில்கிறார்கள்
நீங்களோ அந்த மண்ணும்
வேண்டாம் என்று கரும்புலியாக
புறப்பட்டு தீயாகி
காற்றுடன் கலந்தீர்கள்
தமிழா,,,,உண்மையில் நீ தமிழன் என்றால்
உன்னையே கேட்டுப்பார்
கரும்புலி மாவீரர்களின் சாதனையை
நீ மறந்துவிட்டாயா என்று!
தாலாட்டி வளர்த்த உங்கள்
அன்னை தனை மறந்து
தாய் மண்ணையே நேசித்து
உயிர் கொடுத்த உத்தமரே
உங்களையே தீயாக்கி
எமக்காக எரிந்த உங்களை
தமிழர்கள் ஆகிய நாம்
எம் நெஞ்சில் வைத்து
தினம் தினம் வணங்கிடுவோம்
விழ விழ எழுவோம்
வீறு கொண்டு எழுவோம்,
தமிழீழம் தனை வெல்லும் வரை
நாம் ஓய்ந்திருக்க மாட்டோம்..

என் காதல்

பெண்ணே
உன் கண்ணிலே
ஓராண்டு காலம் வாழ்ந்த
ஒரு நினைவுகள் பெண்ணே
உன் உதட்டிலே
என் பெயர் உச்சரிப்பதும்
உன் கூந்தலில் ஒரு கோடிகாலம்
கூடி வாழலாம் பெண்ணே
உன் கழுத்தில் ஒரு அழகு
வெட்கம் இருந்தும் இல்லாத
புன்னகை சிரிப்பு முகம்
ஒர் அழகு பெண்ணே
நான் உறங்கினாலும் என்
இதயம் உறங்கவில்லை
என் உள்ளத்தில் நீ உறைந்து என்
உறக்கத்தை ஏன் கலைக்கின்றாய்
என் காதல்
காத்திருந்தால் - என்
காதல் காய்க்குமா????
கல்லடி படுவது தான்
காதல் என்றால் - என்
காதல் காயப்படுவது
ஒன்றும் தப்பில்லை
அம்மாவில் கிடைத்தது என் வாழ்வு
அப்பாவில் கிடைத்தது என் உலகம்
சகோதரத்தில் கிடைத்தது என் பாசம்
உன்னில் கிடைத்தது எல்லாமே
தாய்க்கு பின் தாரம் என்பது இதுதானா பெண்ணே!

நிரந்தரமில்லை...


கத்தி இன்றி யுத்தமில்லை
கண்கள் இன்றி காதல் இல்லை
வழியின்றி வாழ்க்கை இல்லை
வலி இன்றி துயரமில்லை
அன்பு இன்றி அன்னையில்லை
ஆசை இன்றி மனிதனில்லை
வேரின்றி மரங்கள் இல்லை
மணம் இன்றி மலர்கள் இல்லை
சுற்றும் இந்தப்பூமிதனில்
சுகமும் துக்கமும் இயற்கையெனில்
மனதார மறுத்துப் பேச
மானிடனால் முடிவதில்லை
ஒன்றை மட்டும் உறுதிசெய்
உலகில் எதுவும் நிரந்தரமில்லை
இதுவும் விலகிப் போகும் என்ற
எண்ணம் மட்டும் நிறுத்தி வை.

மழை !

வானில் இருந்து வரும்
அமுதம்
மழை !
பார்க்கப் பரவசம்
நனைந்தால் குதூகலம்      
மழை !

பயிர்களின் உயிர் வளர்க்கும்
விவசாயிக்கு வளம் சேர்க்கும்
மழை !
 
குடை வேண்டாம்
தடை வேண்டாம்
மழை !
காதலி அருகிலிருந்தால்
காதல் மழை
மழை !
சூடான தேநீர்
சுவை மிகுதி
மழை !
கோடையில் வந்தால்
கொண்டாட்டம்
மழை !
சாலை வியாபாரிகளுக்கு
திண்டாட்டம்
மழை !
குடிசைவாசிகளுக்கு
ஒழுகும்  கவலை
மழை !

நீதான்

நான்
இப்போதெல்லாம்
நிஜத்தில் சிரிப்பதைவிட
உன் கனாக்களில் சிரிப்பதுதான் அதிகம்
உன்னை
மறக்க நினைக்கும் நிமிடங்களில்
எதோ ஒன்று எனக்கு புதிதாய்
உன்னை அறிமுகபடுத்தி வைக்கிறது
நான்
அநாவசியமாய் குழம்பித்தவிக்கிறேன்
உன் அருகாமை என்னமோ
எனக்கு அவசியமாகப்படுகிறது
யாரிடமும்
அடிபணியாத மனசு
உன் இழுப்புக்கெல்லாம் இஸ்டம் போல
செல்லக்குழந்தையாய் அடங்குகிறது
எதிலும்
சுயம் தொலையாத நான்
உன்னிடம் மட்டும் தொலைக்கிறேன்
என்னை ......

என்னவள் அழகிற்கு நிகர் ?


கந்தள் மலரே
உன்னை யார் அழகேன்றார்
உன்னைவிட அழகில்லை என்று
எண்ணாதே குறிஞ்யி மலரே
உன்னையும் தோற்கடிப்பதற்கு
அழகொண்டு இருக்கிறதை
அறியவில்லை போல
செவ்வந்தியே நீயும்
தலை குனிவை சந்திக்கபோகிறாய்
கவி எழுதும் கவிகள் எல்லோரும்
உங்களை மறக்கப்போகிறார்கள்
காரணம் தெரியுமா
மலர்களின் அழகை எல்லாம் வருடி
ஒருத்தி பிறந்துவிட்டாள்
அவளை எல்லா கவியனும்
கண்டுவிட்டான் நிங்கள் இனி எதற்கு ?

ஈழத்துக் காதலி


வகுப்புகளில்
உன் மேசைகளில்
எழுதும் கவிதைகளை பார்த்து தான்
காதலிக்கவே கற்று கொண்டாய்
நானோ!
அன்றில் இருந்து
ஆசிரியர்களிடம் அதிகமாக
அடிவாங்க கற்று கொண்டேன்..
மெழுகுவர்த்தியின் மெல்லிய
வெளிச்சத்தில் நானும் நீயும்
சாப்பிடும் ''டின்னெர்'' ஞாயிறுகளுக்காக
மிச்ச ஆறு நாட்கள்
பட்டினியுடன் காத்து கிடக்கிறேன்...
காதலுடன்..
அன்று உன் வீட்டுக்கு
வந்த போது
நீ தந்த உன் கைபட்ட
தேநீர் போல்
இன்றும் தருவாயா!
சிறு துளி கண்ணீருடன்...
கிளைமோர் வெடிக்கும்
காலங்கள் ஞாபகம்
இருக்கிறதா....
அன்று ஆர்மி போடும்
''கொன்வேயில்'' வளர்ந்தது
நாட்டு பிரச்சனை மட்டுமல்ல....
நம் காதலும் தான்....
ஒரு மழை இரவில்
உன் மனதின்
நிர்வாணத்தையும்
ரசித்தேன்..
அன்று நீ உன் காதலை
சொன்ன நாள்.....
தபாலகமே காதலி அனுப்பும்
கடிதத்துக்கு சீல் குத்தாதீர்!!!!!!!!
கடிதத்தில் வருவது காதல் அல்ல.
காதலி...
ஈழம் செத்து
விட்டதாய் சொன்னார்கள்.
இவள் கண்களில்
என் ஈழத்தை பார்க்கிறேன்...

காத்திருந்தேன்


அன்பே
புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த
அந்த நிமிடம் எப்படி
என்னுள் வந்தாய்....
உன்னருகே இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா
இழந்துவிட்டேன்....
நேற்று வரை
சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே
உன் மனதை....
நினைவுகளே ஒர்
சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள்
ஒளிராமலே
கருகிப் போய்விட்டன....
காத்திருந்தேன் - நீ
வரும் வரை
புரிந்துக்கொண்டேன்
இன்று நீ என்மேல்
கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ
அழுத போது.......

உன் நினைவுகளில்..

அன்பே ....
என் அருகில் நீ இல்லாத போது...
உன் நினைவுகளில்...
என் கண்கள்...
கண்ணீரை வடித்தது....
என் பேனாவோ...
கவிதைகளாய் வடித்தது...
இன்றும் ..
வாழ்கிறது ..
உன் நினைவுகள்...
என் பேனாவின் கண்ணீராய் ...
கண்மணியே காதல் என்றால்
உயிர் என்றாய்
காதலுக்காய் கண்ணீர் சிந்தி
தினமும் கற்பனையில்..
கவி வடித்தாய் ....
உன் வரிகளை
நேசித்ததற்காக ..
ஏன் அந்த வலிகளை
நிஜமாகவே
எனக்கு கொடுத்தாய்
ஓர் இதயம் நேசிப்பதை ....
சில சமயம் மற்ற இதயமும் ...
நேசிப்பதில்லை ...
இரு இதயமும் நேசிப்பதை ...
சில சமயம் இறைவன் கூட....
நேசிப்பதில்லை ...

காதல் என்பது கனிவான பேச்சி...!


காலம் நாலு பருவமாச்சி - என்
காதல் உன் மேலாச்சி...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சி...!
சாதல் வரை சந்தோஷமாச்சி...!!

இன்பம் தருதல் உனக்கான பேச்சி - என்னை
சந்தோசப்படுத்தலே உன் வேலையாப்போச்சி...
துன்பம் எமக்குள் இல்லாமலாச்சி...!
சொர்க்கத்திலே எமது வாழ்வாகிப்போச்சி...!!

கோபம் சில முறை வந்தாகிப்போச்சி....
ஊடல் கூட பல முறையாச்சி...!
பிரிதல் எமக்குள் நடவாத பேச்சி...!!
அலட்டுதல்தானே நாள்தோறும் பேச்சி...!!!

உன்மேல் எனக்கு பைத்தியமாச்சி...
உன் சொந்தத்தைக்கூட எனக்கு பிடிச்சேபோச்சி...!
உலகில் உன்னைக்கண்ட தாய்யாச்சி...!!
கடவுளுக்கு நன்றி சொல்லியுமாச்சி...!!!

என் மனதுள் நீயும் உட்காந்தாச்சி...
இதயம் இரண்டும் ஒன்றாகிப்போச்சி...!
காதல் என்பது கனிவான பேச்சி...!!
இதுவே காலம் முழுவதுமாச்சி...!!!

நீ


என் தொலைவானம் நீயா
எனைத் தீண்டும் மழைத்தூறல் தானா 
என் விழி தேடும் ஒரு தேவதை நீயா
எனைத் தினம்தோறும் தொடுகின்ற ஆனந்தம் தானா
என் மனம் தடுமாறும் தடுமாற்றம் நீயா
எனைத் தடம் மாற்றும் ஒரு போதை தானா
என் கருமாரி நீயா
எனைக் கரையேற்றும் ஒரு தெய்வம் தானா
எனை வாட்டும் பெருங்காதல் நீயா
என்னுயிர் விலை பேசும் வியாபாரி தானா
என் கரும்பாலை நீயா
எனைத் துரும்பாக்கும் துயரங்கள் தானா
என் சுவர்க்கங்கள் நீயா
எனைக் கேட்காமல் பொழிகின்ற ஒரு மாரி தானா 
என் பருவங்கள் நீயா
எனை உருமாற்றும் ஒரு சக்தி தானா
என் திருத்தங்கள் நீயா
எனைத் திசை மாற்றும் பெண் புத்தன் தானா.

ஒற்றைரோஜாவும் ஒரு இதயமும்


அன்று ஏடன் தோட்டத்திலும்
பின்னர் பாரசீகஅந்தப்புர பூங்காக்களிலும்
மொகலாய ராஜபாதைகளிலும்
பூத்துக்குலுங்கிய ரோஜாதான்
இன்று என் வீட்டு ஜன்னல்கரையிலும் பூத்திருக்கிறது.
ஏவாள் விரும்பிக் கேட்ட
அப்பிள் பழத்தை பறித்துகொடுத்த
ஆதாமின் நெஞ்சுக்குள்
துடித்துக்கொண்டிருந்ததும்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
வெற்றிப் புன்னகையுடன்
பாரசீகத்தெருக்களில் நடைபோட்ட
மகா அலெக்சாண்டரின்
இடப்பக்கத்து மார்புக்குள்
அடித்துக்கொண்டிருந்ததும்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
ராஜபுத்திர கோட்டைகளின் மேல்
வில்லுகளுடன் நின்றிருந்த வீரர்களின்
காதலை சொல்லிக்கொண்டிருந்ததும்
இன்று உனக்காகவே எனக்குள்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.! .

தேர்திருவிழாவின் அத்தனை கூட்டத்துக்குள்ளும்
நீமட்டும் எனக்கு தெரிவதுபோலவே..
எத்தனை பூக்கூட்டத்துள்ளும் ஒரு ஒற்றை ரோஜா
தனித்தே தெரியுமே அதைப்போலவே
என் காதலை சொல்லியபடி விரிந்திருக்கும்
இந்த ஒற்றை ரோஜாவும்
உனக்காகவே ஏங்கிக்கிடக்கும் என் இதயமும்
எல்லாவற்றையும் விட மேன்மையானவை
ஏனென்றால் அவை உனக்கானவை.

சுடிதார் உலகத்தில்


மூச்சுக்குள் சேமிப்பு
உன் புன்னகைகள்
ரவிவர்ம வண்ணங்களாய்
உன் பெயரடியாய்
காதல் உயிரடியாய் ...
சத்திரத் தெரு
முச்சந்திப் பிச்சைக்காரனாய்
என் காதலெனும் யாசகத்தில்
சில்லறைச் சிரிப்புச் சிதறல்கள்
விண் வரைந்த ஓவியமாய்
விரல் சேர்ந்த காவியமாய்
தொடரும் நடுக்கத்தில்
பதற்றத்தில் கூடவே
ஆண் வெட்கத்தில்...???
பூவையால்
என் இராத்திரிகள்
கூவைகள் அலறும்
இரவுகளாக்கப்பட்டு
கனவில் மட்டும்
காதல்ப் போதனை
பாவையின்
படிக்கப் படாத மனதை ....
சைவம் துறந்து
என் இதயம்
விழுங்கும் பெண்மையிடம்
சிக்கிக்கொண்டே
சிலிர்த்துக்கொண்டே
சுடிதார் உலகத்தில் நான் ...

நம்பிக்கை போதும்..


காலடியில்
விலகி இருக்கும்
தண்டவாளங்கள்
தூரமாய் பார்க்க
நெருங்குவதாய் தோன்றும்..
நம் பார்வை தெரியாத தூரத்தில்
அவைகள் இணையலாம் என்ற
நம்பிக்கை போதும்..

சோதித்துப்பார்த்து
சம்பாதிக்கபோவது ஏமாற்றமெனில்
ஏன் சோதிக்கவேண்டும்..
அவைகள் இணைந்திருக்குமென்ற
நம்பிக்கையே போதும்...

எங்கே அவள் .......?


இது வரை விடியலாய்
இருந்த நீ
இன்று புதையலாய்
மாறி போனாய்.
இன்னொரு வாழ்கை தேடி
என் வாழ்க்கையை
நரகமக்கினாய்.........???
எந்த வேத  தர்மமடி  இது
இப்படியே தொடரும் எனில்
உன்னில் நான் கதையாகவும்
என்னில் நீ மலராகவும்....
முடிவு உன் கையில்.............????

வண்ணங்கள் தந்தவனே...!


உன் கருமையை தொட்டு
என் இமைகளில் மையிட்டு கொண்டேன்...
உன் நீலங்களை
என் கருநீல விழிகளில் கலந்து கொண்டேன்...
உன் செம்மையில் என் இதழ்களை
சிவப்பாக்கி கொண்டேன்..
உன் பசுமையை என் பாதையில்
புல்வெளியாய் விரித்தேன்...
உன் மஞ்சள் தேய்த்து
மங்கை நான் நீராடினேன் ...
உன் செம்மஞ்சள் நிறத்தில்
என் கன்னங்கள் வெட்கி சிவந்தன...
வண்ணங்கள் தந்த வானவில்லே
என் வாசல் தாண்டி போகாதே...
காதலை  தந்த காவலனே என்னை